பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!
ADDED :4991 days ago
பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடக்கிறது. வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இத்திருவிழாவுக்கு, அண்டை மாவட்டத்திலிருந்தும் பக்தர்கள் குவிவர். ஈரோடு மாவட்டம், பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நகரில் அம்மன் பவனி வந்த போது, உடன் வந்த பக்தர்கள் சிலர் தங்கள் உடலில் பெயின்ட் பூசி, வேடமிட்டு வந்தனர்.