ஈஷாவில் இன்று... தினமலர் நேரடி ஒளிபரப்பு
கோவை: ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா, இன்று மாலை, 6:00 மணி முதல் நாளை காலை, 6:00 மணி வரை நடக்கிறது. முதல் நிகழ்வாக, மாலை, 6:00 மணிக்கு லிங்க பைரவி கோவிலில், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த, 40 ராணுவ வீரர்களின் நினைவாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் சத்குரு இருவரும் இணைந்து ஈஷா வளாகத்தில் மரக்கன்று நடுகின்றனர்.
பின், ஆதியோகி சிலை முன் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த இசைக்கலைஞர்களின் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடக்கின்றன. தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி, திரைப்பட பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்களின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, சத்குருவின் அருளுரை, தியானம், மந்திர உச்சாடனைகள் என, நாளை காலை, 6:00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும், தினமலர்.காம் இணையதளத்தில் நேரடியாக ஒளிரப்பு செய்யப்படுகிறது. இன்று மாலை, 6:00 மணி முதல் நாளை காலை, 6:00 மணி வரை, ஈஷாவில் நடக்கும் விழாவில் பங்கேற்க முடியாதவர்கள், தினமலர்.காம் இணைய தளத்தில், அனைத்து நிகழ்வுகளையும் கண்டு களிக்கலாம்.தினமலர் இணையதள முகவரி: www.dinamalar.com