பழநியில் சிவராத்திரி பாரி வேட்டை தடுக்க வனத்துறை ரோந்து
பழநி:சிவராத்திரியை முன்னிட்டு பாரி வேட்டை பூஜைக்கு விலங்குகளை வேட்டையாடி பயன்படுத்துவதை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து செல்கின்றனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு சில இடங்களில் பாரி வேட்டை நடக்கிறது. குறிப்பிட்ட கிராம, சமுதாயம் சார்ந்த மக்கள், இரவு முழுவதும் வனப்பகுதியில் மான், முயல், நரி ஆகியவற்றை வேட்டையாடுவதையும், மறுநாள் அவற்றை பகிர்ந்து உண்பதையும் வழக்கத்தில் வைத்துள்ளனர்.இதை தடுக்க வனச்சரகர் கணேஷ்ராம் தலைமையிலான வனக்குழுவினர் குதிரையாறு அணைப்பகுதி, பாலாறு ஜீரோ பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணிநேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மலை கிராமங்களிலும் பாரி வேட்டை தடை, வன உயிர்களை காப்பதன் முக்கியத்துவம், வேட்டையில் ஈடுபடுட்டால் தண்டனை குறித்து எச்சரிக்கை செய்தனர்.
கணேஷ்ராம் கூறுகையில், வனப்பகுதியில் வேட்டையாடுதல், இறந்த விலங்குகளை சேகரித்தல் தண்டணைக்குரிய குற்றமாகும். ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஏழு பேர் குழுவாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறோம் என்றார்.