கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் மாநாடு
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் மாநாடு நேற்று நடந்தது. கடலுார் பாடலீஸ்வரர் கோவில் முன் மண்டபத்தில் திருவாசக முற்றோதல் மாநாடு நேற்று காலை காலை 7:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம்அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் நிகழ்ச்சி துவங்கியது.
திருக்கழுகுன்றம் திருவாசக சித்தர் தாமோதரன் தலைமை தாங்கி, திருவாசக பாடல்களை பாடி திருவாச முற்றோதல் நிகழ்ச்சியை துவங்கினார். பாடலீஸ்வரர் கோவில் சன்னதி தெருவில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். மாநாடு ஏற்பாடுகளை ராமலிங்கம், வேணுசாமி, உதயவேலு மற்றும் அனைத்து சிவனடியார் திருக்கூட்டம், அர்த்தசாம, 63 நாயன்மார்கள் வழிபாட்டு அமைப்பு மற்றும் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.