உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில், உருவார பொம்மைகள் தயாரிப்பு தீவிரம்

கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில், உருவார பொம்மைகள் தயாரிப்பு தீவிரம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில், மகா சிவராத்திரி மற்றும் நேர்த்திக் கடனுக்காக கோவில்களில் அர்ப்பணிக்கப்படும், உருவார பொம்மைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்து உள்ளது.மண்பாண்ட தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும், உற்பத்தியில், கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க, தாசில்தார் மற்றும் கலெக்டர் அலுவலகத் திலும் அனுமதி கேட்டுப்பெற, நீண்ட நாட்களாகிறது. அனுமதி கிடைத்தால், மண் எடுத்து மண் பானைகள் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் தீபங்கள் தயாரிப்பு, மார்கழி, தை மாதங் களில் அடுப்பு, பொங்கல் பானைகள் தயாரிப்பு, மாசி, பங்குனி மாதங்களில் நேர்த்திக்கடன் செலுத்த உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

தற்போது, சமையல் பானைகளுடன், உருவார பொம்மைகள் தயாரிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். எருது, காளை, கன்றுகள் உருவங்களை களிமண்ணில் வடிவமைத்து, கொம்புகள், கட்டுக்கயிறுகள் ஆகியவற்றுக்கு வர்ணம் தீட்டி, வெயிலில் காயவைத்து உள்ளனர்.இப்பணியில், கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்காரம் பாளையம், பெரும்பதி, செட்டிக்காபாளையம் பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த உருவார பொம்மைகள், இன்று (மார்ச் 4ல்.,) நடக்கவுள்ள மகா சிவராத்திரி விழாவிலும், அடுத்து வரும் கோவில் திருவிழாக்களிலும் விற்பனை செய்யப் படும். இவை ஜோடியாக, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !