உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் நஞ்சுண்டேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஓசூர் நஞ்சுண்டேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஓசூர்: ஓசூர் நஞ்சுண்டேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஓசூர் அடுத்த, பாகலூர் அருகே உள்ள சூடாபுரத்தில், மகா சிவராத்திரியையொட்டி, நஞ்சுண்டேஸ்வர சுவாமி கோவிலில், 15ம் ஆண்டு தேரோட்டம், நேற்று (மார்ச்., 4ல்) நடந்தது.

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேரை வடம் பிடித்து இழுத்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை அடைந்தது. அதேபோல், கெலமங்கலம் அடுத்த, பேவநத்தம் அருகே, மலை உச்சியில் உள்ள சிவா நஞ்சுண்டேஸ்வரா சுவாமி கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில், மதகொண்டப்பள்ளி அரிகேஸ்வர சிவன் கோவில், அத்திமுகம் ஐராவதீஸ்வரர் கோவில், சூளகிரி மலை அடிவாரத்தில் உள்ள, ஈஸ்வரன் கோவில், ஓசூர் தேர்ப்பேட்டை பச்சைகுளம் பத்ரகாசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !