உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகனூர் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா

மோகனூர் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா

மோகனூர்: சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். ஆண்டு தோறும், சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி பூஜைகள் வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்தாண்டு சிவராத்திரி பூஜை, நேற்று (மார்ச்., 4ல்) மாலை துவங்கியது. மோகனூர் காவிரிக்கரையோரத்தில், பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி, மதுகரவேணி அம்மாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜை நடக்கிறது. அதன்படி, நேற்று (மார்ச்., 4ல்) இரவு, 7:30 மணிக்கு, முதல் கால பூஜை, 10:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, நேற்று (மார்ச்., 4ல்)அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் காலபூஜை நடந்தது. சிவலிங்கத்துக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது.

அதேபோல், மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில், கொல்லிமலை, அரப்பளீஸ்வரர் கோவில் என, மாவட்டம் முழுவதும் உள்ள, சிவன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !