கடலூர் திருச்சோபுரத்தில் பிரம்மோற்சவம்
ADDED :2450 days ago
கடலூர்: திருச்சோபுரம், திருச்சோபுரநாத சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வரும் 10ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, விநாயகர் பூஜை நடக்கிறது. 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தினமும் காலை, இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது. 19ம் தேதி காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 20ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 11:00 மணிக்கு தெப்பல் உற்சவமும், 21ம் தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது.