உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதாள கண்டியம்மன் கோவில் மகா சிவராத்திரி பள்ளய திருவிழா

பாதாள கண்டியம்மன் கோவில் மகா சிவராத்திரி பள்ளய திருவிழா

 போத்தனுார்: சுந்தராபுரத்தில் நடந்து வந்த பாதாள கண்டியம்மன் கோவில், பள்ளய திருவிழா இன்று நிறைவடைகிறது. சுந்தராபுரத்தை அடுத்து முருகா நகர், ரங்கசாமி செட்டியார் காலனியிலுள்ள பாதாள கண்டியம்மன் கோவிலில், மகா சிவராத்திரி முன்னிட்டு பள்ளய திருவிழா, நேற்று முன்தினம் சுத்த புண்ணியவாசனை, கணபதி ஹோமம், கங்கணம் அணிவித்தலுடன் துவங்கியது.

தொடர்ந்து விநாயகர், பாதாள கண்டியம்மன், பேச்சியம்மன், சப்தகன்னிமார், மாடத்தி அம்மன் சாமிகளுக்கு அபிஷேக பூஜைகளும், அம்மன் அழைத்தல், பள்ளயம் படைத்தல் மற்றும் அலங்கார பூஜையும் நடந்தன. நேற்று குறிச்சி குளக்கரையிலுள்ள, பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரக ஊர்வலம் நடந்தது. மதியம் அக்னி அபிஷேக ஆராதனை, அன்னதானம் மறறும் மாலை, மாவிளக்கு வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். நிறைவு நாளான இன்று காலை, 10:00 மணிக்கு, பாதாள கண்டியம்மனுக்கு சங்காபிஷேகமும், மதியம் மறு பள்ளயம், அன்னதானமும், மாலை, அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !