உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்தவர்களின் தவக்காலம் ‘சாம்பல் புதனுடன்’ துவக்கம்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் ‘சாம்பல் புதனுடன்’ துவக்கம்

அவிநாசி: கிறிஸ்­த­வர்­க­ளின், தவக்­கா­லம், இன்று, சாம்­பல் புதன் நிகழ்ச்­சி­யு­டன் துவங்­கு­கிறது. ஏசு கிறிஸ்து மனி­த­னாக வாழ்ந்து, சிலு­வை­யில் அறை­யப்­பட்டு, 3-ம் நாள் உயிர்த்­தெ­ழுந்த நாள், ஈஸ்டர் பெரு­நா­ளாக கொண்­டா­டப்­ப­டு­கிறது. அடுத்த மாதம், 21ம் தேதி ஈஸ்­டர் பெரு­நாள் கொண்­டா­டப்­ப­டு­கிறது.

ஈஸ்­டர் தினத்­துக்கு முன், 40 நாட்­கள் தவக்­கா­லம், அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது. அதன்­படி இன்று, சாம்­பல் புதன் நிகழ்ச்­சி­யு­டன் தவக்­கா­லம் துவங்­கு­கிறது. இதற்­காக, அனைத்து தேவா­ல­யங்­க­ளி­லும், காலை மற்­றும் மாலை­யில், சிறப்பு திருப்­பலி நடத்­தப்­படும்.

தேவா­ல­யங்­களில், அனை­வ­ரது நெற்­றி­யி­லும், சாம்­பல் பூசப்­படும். பின், ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மை­யும், கிறிஸ்­து­வின் சிலு­வைப்­பா­டு­களை தியா­னிக்­கும் வகை­யில் தேவா­ல­யங்­களில் சிலுவை பாதை வழி­பாடு நடக்­கும். மேற்­கொண்ட தவ முயற்­சியை வாழ்­நாள் முழுக்க கடை­பி­டிக்க வேண்­டும் என்ற கருத்தை மைய­மாக வைத்து, ஈஸ்­டர் பெரு­நா­ளில், தேவா­ல­யங்­களில் சிறப்பு திருப்­பலி நிறை­வேற்­றப்­படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !