உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி பூஜை

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி பூஜை

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கடலுார் பெரிய நாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில் 36ம் ஆண்டு மகா சிவராத்திரியையொட்டி, சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பாடலீஸ்வரருக்கு நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, முதல் கால சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு 2ம் கால சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்  விடிய நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை முதல் இரவு வரை மாணவ, மாணவியரின் வாய்ப்பட்டு, பரதநாட்டியம், இசையாஞ்சலி, சிவதாண்டவ நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.  இதேப் போன்று மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரர் கோவிலிலும் மகா சிவராத்திரி பூஜைகள், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !