உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லடம் சிவாலய பக்தி ஓட்டம்:பக்தர்கள் பரவசம்

பல்லடம் சிவாலய பக்தி ஓட்டம்:பக்தர்கள் பரவசம்

பல்லடம்:சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பல்லடத்தில் நடந்த சிவாலய ஓட்டம் நிகழ்ச்சியில், பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்.

பல்லடம் வட்டார சிவாலயங்களில் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லடம் ஸ்ரீஅருளானந்த ஈஸ்வரர் கோவிலில், சிவாலய ஓட்டம் நடந்தது.அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் துவங்கி, பல்லவராயன்பாளையம், மற்றும் கவுண்டம்பாளையம் பரமசிவன் கோவில், சாமளாபுரம் சோழிஸ்வரர் கோவில், கரடிவாவி ஏகாம்பரேஸ்வரர் கோவில், மற்றும் பல்லடம் பொன்காளியம்மன் கோவில் வரை நடந்தது.பக்தர்கள் குழுவினர் கூறுகையில், இரண்டாவது ஆண்டாக சிவாலய ஓட்டம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். அதன்படி, ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று, பஜனைகள் பாடி, 63 நாயன்மார்களின் வரலாற்றை கூறி, வழிபாடு செய்து புறப்படுவோம். இறுதியில், பொன்காளியம்மன் கோவிலில் நிறைவு செய்தோம், என்றனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !