திருப்பூர் செல்வநாயகி அம்மன் கோவில் முப்பெரும் விழா
திருப்பூர்:கீரனூர், செல்வநாயகி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவையொட்டி முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.
காங்கயம் அருகே கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவிலில், கடந்தாண்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதன், முதலாமாண்டு நிறைவு விழா, புதிய கொடிமரம் ஏற்றுவிழா, பால்குட உற்சவ விழா என முப்பெரும் விழா நடக்கிறது.அதில், வரும், 11ல், கிராம சாந்தி, 12ல், கொடிமர அபிஷேகம், த்வஜாரோஹணம், 13ல், பூர்ணாஹூதி தீபாராதனை, 14ல், கீரனூர் மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் ஊர்வலமாக எடுத்து வருதல், உற்சவர் சிறப்பு அலங்கார பூஜை மற்றும் திருவீதி உலா நடத்தப்படுகிறது.
அதேபோல், தினமும், மகா அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், மகாதீபாராதனை ஆகியவையும் இடம்பெறவுள்ளது. மேலும், 14ம் தேதி, பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. முப்பெரும் விழா ஏற்பாடுகளை ஆறுகுலத்தோர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.