உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் விஸ்வகர்மா காயத்ரி கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்

திருப்பூரில் விஸ்வகர்மா காயத்ரி கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்

திருப்பூர்:திருப்பூரில் விஸ்வகர்மா-காயத்திரி தேவி கோவில் கட்டுவது குறித்து விஸ்வகர்மா அறக்கட்டளை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.விஸ்வகர்மா மக்கள் நல அறக்கட்டளை சார்பில், காமாட்சியம்மன் நகர், விஸ்வகர்மா சமூக நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நேற்று (மார்ச்., 6ல்) ஆலோசனை கூட்டம் நடந்தது.

நிர்வாக குழு தலைவர் மணி, செயலாளர் ராஜூகுமார், ஆலோசகர் முருகானந்தம், மணிசர்மா முன்னிலை வகித்தனர். ராமசுப்ரமணியம், மகாலிங்கம், விஸ்வநாதன் உட்பட பலர் பேசினர்.இதில் விஸ்வகர்மா ஐந்து குல மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். விஸ்வகர்மா, கொல்லர், தச்சர், சிற்பி, கன்னார் ஆகிய பிரிவினர் ஒன்றிணைந்து, விஸ்வகர்மா மக்கள் நல அறக்கட்டளை அமைப்பு மூலம், திருப்பூரில் முதன் முறையாக விஸ்கர்மா மற்றும் காயத்ரி தேவிக்கு கோவில் கட்டுவது குறித்து ஆலோசனை நடந்தது.அதன்பின், அறக்கட்டளை சார்பில், திருமண மண்டபம், பள்ளிக் கூடம் கட்ட முயற்சி மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !