உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கருப்பராயன் கோவிலில் குண்டம் திருவிழா

பொள்ளாச்சி கருப்பராயன் கோவிலில் குண்டம் திருவிழா

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தேவம்பாடி காளிபாளையம் மந்தகாட்டு கருப்பராயன் கோவிலில் நாளை (8ம் தேதி) குண்டம் திருவிழா நடக்கிறது.தேவம்பாடி மந்தகாட்டு கருப்பராயன், காளியம்மன் கோவிலில், 34ம் ஆண்டு பள்ளைய விழா நடக்கிறது.

திருவிழா கடந்த, 1ம் தேதி கொடி கட்டுதலுடன் துவங்கியது. இன்று (மார்ச்., 7ல்) பெரிய கருப்பராயன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், இரவு அன்னதானம் நடக்கிறது.நாளை (மார்ச்., 8ம் தேதி)காலை கணபதி ஹோமம், குண்டம் திறப்பு, பூ வளர்த்தல்; மதியம் பள்ளைய பூஜை, கங்கை செல்லுதல்; மாலை, 4:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நடக்கிறது. நாள் முழுக்க அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !