கோவிந்தவாடியில் மயான கொள்ளை
ADDED :2452 days ago
கோவிந்தவாடி: கோவிந்தவாடி அகரம் காலனி கிராமத்தில், மயானக் கொள்ளை உற்சவம், நேற்று நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஊராட்சியில், கோவிந்தவாடி அகரம் காலனி கிராமம் உள்ளது.
இங்கு, மாசி மாத அமாவாசை மறுநாள் நடக்கும், மயானக் கொள்ளை உற்சவம், நடப்பாண்டு, நேற்று நடந்தது. கம்மவார்பாளையத்தில் கபால சட்டி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, காப்பு கட்டிய பக்தர்கள், அலகு குத்தி, நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு, மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். கோவிந்தவாடி அகரம் காலனி கிராமத்தை சுற்றியுள்ள பல கிராம மக்கள், அம்மனை தரிசித்தனர்.