150 வயது கோவில் அரசமரம் முறிந்து விழுந்தது: பக்தர்கள் வருத்தம்
ADDED :2415 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 150 ஆண்டுகள் பழமையான அரச மரம் முறிந்து விழுந்தது. திருவண்ணாமலையில், அய்யங்குளக்கரையில், 150 வயதுள்ள, 150 அடி உயர அரச மரத்தடியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, பக்தர்கள் தினமும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வந்தனர்.
மேலும், நாகதோஷ நிவர்த்திக்காக, மரத்தடியில் அமைக்கப்பட்டிருந்த நாகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து பெண்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை, 6:30 மணிக்கு அரச மரம் வேருடன் முறிந்து பலத்த சத்தத்துடன் விழுந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சென்று பார்த்தபோது, மரத்தின் வேரில் பூச்சி தாக்குதல் நோயால் பாதித்து, முறிவு ஏற்பட்டது தெரிந்தது. இதில், அங்கிருந்த சுவாமி சிலைகள் சேதமடைந்தன. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.