அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்
ADDED :2464 days ago
மானாமதுரை: மானாமதுரை – தாயமங்கலம் ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. சிவராத்திரியன்று கோயிலில் இருந்து முளைப்பாரிகளுடன் புறப்பட்ட பெண்கள் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து மறுநாள் காலை அலங்காரகுளத்தில் கரைத்தனர்,பின்னர் அம்மனுக்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.