உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி

அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி

ராசிபுரம்: ராசிபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சிவராத்திரி விழாவையொட்டி, மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. ராசிபுரத்தில், மாசி மாதம் அங்காளம்மன் கோவில் சிவராத்திரியை ஒட்டி, விழா நடைபெறுவது வழக்கம்.


அதன்படி, இந்தாண்டு விழாவில், பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில், சுவாமி உற்சவர் ஊர்வலம் நடந்தது. கடந்த, 13ல் நடந்த, தீ மிதிக்கும் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை, 6:00 மணியளவில் அம்மனை முத்துகாளிப்பட்டி மயானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மயான கொள்ளை நடந்தது. இதையொட்டி, மயானத்தில் இருந்த பேச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக கொண்டு வந்திருந்த ஆடுகள், கோழிகளை பூசாரிகள் மற்றும் விரதமிருந்த பக்தர்கள் பலியிட்டனர். இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !