உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவில் குண்டம் விழா

அங்காளம்மன் கோவில் குண்டம் விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவில் மயான கொள்ளைத் திருவிழாவை முன்னிட்டு, குண்டம் விழா நடந்தது. நேதாஜி சாலை மயானத்தில் இருந்து, சுவாமியை அலங்கரித்து, ஊர்வலமாக கோவிலுக்கு, அலகு குத்தியும்,  காளிவேடமணிந்தும் பக்தர்கள் கொண்டு வந்தனர். கோவில் வளாகத்தில் நடந்த குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர். பெண்கள், இளைஞர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். இதில், 1,000க்கும் மேற்பட்ட  பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !