உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்­ப­ர­நா­தர் கோவி­லில் பிரம்மோற்சவம் துவக்கம்

ஏகாம்­ப­ர­நா­தர் கோவி­லில் பிரம்மோற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம்: ஏகாம்­ப­ர­நா­தர் கோவி­லில், இந்­தாண்டு பங்­குனி உத்­திர பிரம்­மோற்­சவ விழா­வுக்­கான கொடி­யேற்­றம், நேற்று இரவு ஏற்­றப்­பட்­டது. காஞ்­சி­பு­ரம் ஏகாம்­ப­ர­நா­தர் கோவி­லில் நடக்­கும், பங்­குனி உத்­திர பிரம்­மோற்­ச­வம், விசஷே­மா­னது. நான்கு ஆண்­டு­க­ளாக, இவ்­விழா நடை­பெ­ற­வில்லை. இந்த ஆண்டு, கண்­டிப்­பாக நடத்த வேண்­டும் என, பக்­தர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

இந்­நி­லை­யில், நேற்று காலை, கோவி­லில் கொடி­யேற்ற விழா நடத்த, கோவில் நிர்­வா­கம் நட­வ­டிக்கை மேற்­கொண்­டது. ஆனால், கோவில் அருகே உள்ள தெரு­வில், ஒரு­வ­ரின் மர­ணத்­தால், இப்­பணி தடை­ப்பட்­டது. பின், மாலை­யில் கொடி­யேற்­றம் நடத்த முடிவு செய்­யப்­பட்­டது. இதற்­கி­டையே, பங்குனி உத்­திர பிரம்­மோற்­சவ விழா­வில், பழைய உற்­ச­வர் சிலையை வீதி­யு­லா­வுக்கு பயன்­ப­டுத்த வேண்­டும் என, பக்­தர் ஒரு­வர், சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தொடுத்த வழக்­கில், நேற்று தீர்ப்பு வெளி­யா­னது. அதில், ‘பிரம்­மோற்­ச­வம், வழக்­கம் போல் நடத்த வேண்­டும். மூன்று மணி நேரத்­தில், சிதி­லம் அடைந்த பழைய உற்­ச­வர் சிலையை, ஜடி­பந்­த­னம் செய்து, வீதி­யு­லா­வுக்கு பயன்­ப­டுத்த வேண்­டும்’ என, நீதி­ப­தி­கள் குறிப்­பிட்­டுள்­ள­தாக, தக­வல் வந்­தது. இதை­ய­டுத்து, கோவில் வளா­கத்­தில், அற­நி­லை­யத் துறை அதி­கா­ரி­கள், ஆலோ­சனை நடத்தி கொண்டிருந்த­னர்.

இதற்­கி­டையே, உயர் நீதி­மன்ற உத்­த­ரவை அறிந்த பக்­தர்­கள், உப­ய­தா­ரர்­கள், கோவில் செயல் அலு­வ­லர் அலு­வ­ல­கம் முன் கூடி, நீதி­மன்ற உத்­த­ரவை நிறை­வேற்­றும்­படி, கோஷ­மிட்­ட­னர். இந்­நி­லை­யில், சிலை கடத்­தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்க­வேல், அற­நி­லை­யத் துறை உதவி ஆணை­யர், ரம­ணி­யி­டம், மொபைல் போனில் பேசி­னார். அப்­போது, ‘பழைய சிலையை வைத்து உற்­ச­வம் நடத்­துங்­கள். விழா­விற்கு பாது­காப்பு தேவை­யென்­றால் ஏற்­பாடு செய்­கி­றேன்’ என, கூறி­னார். இதை­ய­டுத்து, இரவு, 7:00 மணிக்கு, பங்­குனி உத்­திர பிரம்­மோற்­சவ விழா கொடி­யேற்­றம், ஏகாம்­ப­ரர் கோவி­லில் நடந்­தது. காலை­யில் இருந்து, கோவி­லில் காத்­தி­ருந்த பக்­தர்­கள், பழைய உற்­ச­வரை பயன்­ப­டுத்தி பிரம்­மோற்­ச­வத்தை நடத்த உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­ட­தால், சந்­தோ­ஷம் அடைந்துள்ளனர். திருத்தணி:  திருவாலங் காடு, வடா­ரண்­யேஸ்­வரர் கோவிலில், பங்­குனி மாத பிரம்­மோற்­சவ விழா, கொடி­யேற்­றத்­து­டன், நேற்று நடந்­தது. 23ம் தேதி வரை பிரம்­மோற்­சவ விழா நடை­பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !