உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு

வால்பாறை சுப்ரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு

வால்பாறை: வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில், மங்கள சஷ்டி கிருத்திகையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. சஷ்டியும், கிருத்திகையும் ஒரே நாளில் வருவதால் ‘மங்கள சஷ்டி கிருத்திகை’ என்றழைக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை நாளில் வரும் சஷ்டி, கிருத்திகை மிகவும் அபூர்வமாகும். சிறப்பு மிகுந்த இந்த நாளில், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், முருகனுக்கு பல்வேறு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !