ஐஸ்வர்ய பொங்கல் காண்போமா
ADDED :4982 days ago
மதுரையில், பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்ட கண்ணகி தெய்வப் பெண்ணாக மாறினாள். இவளுக்கு திருவனந்தபுரம் ஆற்றுக்காலில் கோயில் எழுப்பப்பட்டது. அங்கு பகவதியம்மன் என்ற பெயரில் எழுந்தளினாள். இங்கு மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் நடக்கும் பொங்கல் திருவிழா மிகவும் விசேஷம். பெண்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்பர்.2009ல் ஒரேநாளில் 25லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து சாதனை படைத்தனர். கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றுள்ளது. ஐஸ்வர்ய பொங்கல் விழா, சென்னை போரூர் அருகே ஐ.சி.எல்., ஹோம் டவுன் நோம்பலில் (வேலப்பஞ்சாவடி) 2009 முதல் நடத்தப்படுகிறது. மூன்றாம் ஆண்டு விழா, மார்ச்7ல் நடக்கிறது. கலந்து கொள்பவர்கள், 94452 30409ல் தொடர்பு கொள்ளலாம்.