உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் கடம்பாடி கோவில் உண்டியல்களில் ரூ.6.66 லட்சம் காணிக்கை

மாமல்லபுரம் கடம்பாடி கோவில் உண்டியல்களில் ரூ.6.66 லட்சம் காணிக்கை

மாமல்லபுரம்:மாமல்லபுரம், கடம்பாடி கோவில்கள் உண்டியல்களில், 6.66 லட்சம் ரூபாய், காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவில்களின் உண்டியல்களில், பக்தர்கள், காணிக்கை செலுத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று (மார்ச்., 13ல்), உண்டியல் திறக்கப்பட்டு, உதவி ஆணையர், தியாகராஜன், ஆய்வாளர் கோவிந்தராஜ், செயல் அலுவலர், சங்கர் மேற்பார்வையில், காணிக்கை கணக்கிடப் பட்டது.

மாரி சின்னம்மன் கோவிலில், 4.68 லட்சம் ரூபாய், 45 கிராம் தங்கம், 118 கிராம் வெள்ளி; ஸ்தலசயன பெருமாள் கோவிலில், 1.98 லட்சம் ரூபாய் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !