திருத்தணியில் கிருஷ்ணர் உற்சவம்
ADDED :2565 days ago
திருத்தணி:திருத்தணியில், கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி - - அரக்கோ ணம் சாலை, சுப்ரமணியபுரம் பகுதியில், கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது. இதில், உற்சவர் கிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. அதன் பின் நடந்த கல்யாண மாலை பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.