ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2433 days ago
ஈரோடு: ஈரோடு, ரங்கம்பாளையத்தில் பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. மூன்றாம் ஆண்டாக, குண்டம் விழா நடக்க இருக்கிறது. கடந்த, 12ல், பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (மார்ச்., 18ல்)மதியம், காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், அபிஷேகம் மற்றும், இரவில் அன்னதானம் நடக்கிறது. நாளை (மார்ச்., 19ல்), அக்னி கபாலம் எடுத்தல், அலகு குத்தும் விழா நடக்கிறது. 20 காலை, 5:00 மணிக்கு, குண்டம், பூ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.