பழநியில் தங்க ரதம் நிறுத்தம்
ADDED :2497 days ago
பழநி: பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, பழநிமுருகன் கோயிலில் நாளை (மார்ச்.19) முதல் மார்ச் 23 வரை தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்படுகிறது.
பழநி முருகன் மலைக்கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமார சுவாமி புறப்பாடு நடக்கிறது.
இரண்டாயிரம் செலுத்தும் பக்தர்கள் மட்டுமே தங்கரதம் இழுக்க அனுமதிக்கப்படுகிறது. தைப்பூசம், கார்த்திகை, நவராத்திரி போன்ற விழாக்காலங்களில் கூட்டநெரிசல் காரணமாக தங்கரதம் நிறுத்தப்படும்.அதன்படி மார்ச் 15 முதல் 24 வரை பங்குனி உத்திரவிழா நடக்கிறது. இதன் காரணமாக நாளை (மார்ச் 19) முதல் மார்ச் 23 வரை தங்கரதப் புறப்பாடு நிறுத்தப் படுகிறது. கோயில் சார்பில் நாளை மட்டும் தங்கரதப் புறப்பாடு நடக்கிறது. அதில் பக்தர்கள் ரதம் இழுக்க அனுமதி கிடையாது.