அரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :2432 days ago
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவிலில் நடந்த வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.