திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை
ADDED :2435 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஜெபக்குட அபிஷேகம் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா சென்றனர். மதுரை சுற்றியுள்ள பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மூலவர் சக்திவேலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் முடிந்து வெள்ளிக் கவசம் சாத்துப்படியானது. பின் வருடாபிஷேகம் முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.