உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 108 பிரதட்சணம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 108 பிரதட்சணம்

மதுரை: கூடலழகர் கோயிலில் விஷ்ணு பாராயண சபையினர், நாடு நலம் பெறுவதற்காக விஷ்ணு சகஸ்ரநாமத்தை சொல்லிக்கொண்டே தினமும் இங்குள்ள அஷ்டாங்க விமானத்தை 12 முறை சுற்றி வந்து வழிபாடு செய்வார்கள். இந்த சபையினர் இன்று பவுர்ணமியை முன்னிட்டு ஓம் நமோ நாராயணாய என்ற அஷ்டாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி, அஷ்டாங்க விமானத்தை 108 முறை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். மிகவும் கடினமான இந்த பிரதட்சணம் செய்வதற்கு சுமார் இரண்டரை மணி நேரமாகும்.  இப்படி பிரதட்சணம் செய்வதால் உடனடி பலன் கிடைக்கும் என்றும், ஒவ்வொரு பவுர்ணமிக்கும் இப்பபடி 108 முறை சுற்றி வருவதாகவும் இந்த சபையின் தலைவர் மதுரை துக்காராம் என அழைக்கப்படும் ஜெகதீசன் கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !