உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திரம்: பழநியில் அர்ச்சனை செட் ரூ.250

பங்குனி உத்திரம்: பழநியில் அர்ச்சனை செட் ரூ.250

பழநி: பங்குனி உத்திரவிழாவையொட்டி பழநியில் வாழைப்பழம், தேங்காய்,  சந்தனம், பூ மாலை அடங்கிய அர்ச்சனை செட்  ஒன்று ரூ.250 வரை விற்கின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பங்குனி உத்திரவிழா காரணமாக கொடுமுடி  தீர்த்தக்காவடிகளுடன் ஏராளமான பக்தர்கள்  பாதயாத்திரை வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பாதவிநாயகர்கோயில், இடும்பன்கோயிலில் விடலைத் தேங்காய் உடைத்தும், தேங்காய், பழங்கள் வாங்கி அர்ச்சனையும் செய்கின்றனர். இதனால் ரூ.100க்கு விற்ற, பூக்கள், மாலை, சந்தனம், குங்குமம் விபூதி, கற்பூரம், தேங்காய், பழம், எலுமிச்சை அடங்கிய அர்ச்சனை செட் ரூ. 250வரை விற்றது. குறிப்பாக விடலைத் தேங்காய் ஒன்று ரூ.40க்கு விற்கின்றனர். இதனால் வசதியில்லாத பக்தர்கள் அர்ச்சனை செட் வாங்கமுடியாமல் வெறும் சூடம், பத்தி மட்டும் வாங்கி வழிபடுகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !