காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
ADDED :2433 days ago
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவில், நேற்று (மார்ச்., 20ல்) தேரோட்டம் நடந்தது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி விநாயகர், சுப்ரமணியர், கைலாசநாதர், சுந்தராம்பாள், சண்டிகேஸ்வர், அஸ்திரதேவர் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் (மார்ச்., 19ல்) திருக் கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.நேற்று (மார்ச்., 20ல்)தேர் திருவிழா நடந்தது. அமைச்சர் கமலக்கண்ணன், கீதாஆனந்தன் எம்.எல்.ஏ., போலீஸ் எஸ்.பி., மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் கேசவன் உள்ளிட்டோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பாரதியார் சாலை, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி வழியாக, தேர் நிலையை வந்தடைந்தது.