உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி சூரசம்ஹார லீலை நடந்தது. சுவாமிக்கு இன்று (மார்ச் 22) பட்டாபிஷேகம் நடக்கிறது.விழாவில் திருக்கல்யாணம் மார்ச் 24 நடக்கிறது. அதையொட்டி இன்று (மார்ச்., 22) இரவு 7:30 - 8:30 மணிக்குள் கோயில் ஆறுகால் பீடத்தில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

சூரசம்ஹார லீலையையொட்டி நேற்று (மார்ச்., 21ல்) மாலை யானை, ஆடு, சிங்கம் உட்பட பல்வேறு தலைகளுடன் சூரபத்மன் முன்செல்ல, குதிரை வாகனத்தில் வீரபாகுத் தேவர், யானையின் மீது அமர்ந்து திருவிழா நம்பியார் சிவாச்சார்யார் வாள் ஏந்தி சென்றார்.தொடர்ந்து கௌதா சப்பரத்துடன் தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !