உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை பரதீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர விழா

ஊத்துக்கோட்டை பரதீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர விழா

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, தாராட்சி கிராமத்தில், ஆரணி ஆற்றின் கரையில் உள்ளது பரதீஸ்வரர் கோவில். இக்கோவிலில், பிரதோஷம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் சிறப்பு வாய்ந்தவை.பங்குனி உத்திர விழாவையொட்டி, பழனிஆண்டவர் அன்னதான சபை சார்பில், பால்குட அபிஷேக விழா நடந்தது.காலை, 9:00 மணிக்கு, அங்குள்ள பெருமாள் கோவிலில் இருந்து,பெண்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று, பரதீஸ்வரர் கோவிலைஅடைந்தனர்.

அங்கு பக்தர்கள் எடுத்து வந்த பாலை, பரதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.இதைத் தொடர்ந்து, தயிர், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.ஊத்துக்கோட்டை,திருநீலகண்டேஸ் வரர் கோவில், சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், பங்குனி உத்திர விழா சிறப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !