காஞ்சிபுரம், அபிராமசுந்தரி உடனாகிய அமரேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழா
ADDED :2449 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், அபிராமசுந்தரி உடனாகிய அமரேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம், விமரிசையாக நடந்தது.
அபிராமசுந்தரி அம்பாளும், அமரேஸ்வரரும், தம்பதி சமேதராய் திருமண கோலத்தில், பக்தர் களுக்கு அருள்பாலித்தனர்.தொடர்ந்து, சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத் திலும் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளிலும் உலா வந்தனர். திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.