திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2500 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா மார்.,12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் 16ம் தேதி கைப்பாரமும், 20ல் பங்குனி உத்திரமும், 21ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.