உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியாபட்டி மல்லாங்கிணர் சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

காரியாபட்டி மல்லாங்கிணர் சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

காரியாபட்டி: காரியாபட்டி மல்லாங்கிணர் செங்கமல தாயார், சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. பக்தர்கள் பொங்கல் அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தல், சிறப்பு பூஜை செய்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

முக்கிய நிகழ்ச்சியாக சென்னகேசவப்பெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதி வழியாக சென்ற தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். அன்று இரவு தேர் நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !