பொதட்டூர்பேட்டை தீமிதி திருவிழா கோலாகலம்
ADDED :2464 days ago
பொதட்டூர்பேட்டை: திரவுபதியம்மன் கோவில், தீமிதி திருவிழா நேற்று (மார்ச்., 24ல்) கோலா கலமாக நடந்தது. திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று, தர்மராஜா பட்டாபிஷேகம் நடக்கிறது.
பொதட்டூர்பேட்டை திரவபதியம்மன் கோவில், தீமிதி திருவிழாவில், நேற்று (மார்ச்., 24ல்) காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.இதில், பீமசேனன், துரியோதனை வெற்றி கொணடார். அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் எழுப்பப்பட்ட பிரமாண்ட அக்னி குண்டத்தில், திரவுபதியம்மன் அக்னி பிரவேசம் செய்தனர்.காப்பு கட்டி விரதம் மேற்கொண்டி ருந்த திரளான பக்தர்களும் உடன் தீயில் இறங்கி, தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று (மார்ச்., 25ல்)திங்கட்கிழமை காலை தர்மராஜா பட்டாபிஷேகம் நடக்கிறது.