ரெகுநாதபுரம் சித்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2411 days ago
ரெகுநாதபுரம்:வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், மந்தை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று (மார்ச்., 24ல்)காலை நடந்தது. கடந்த மார்ச் 22 அன்று அனுக்ஞை பூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.
நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல்உள்ளிட்ட நான்கு கால பூஜைகள் நிறைவேற்றப்பட்டது. நேற்று (மார்ச்., 24ல்) காலை 10:00 மணியளவில் விமான கலசத்தில் புனிநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகளும், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வண்ணாங்குண்டு வடக்கு கிராமப் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.