திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :2696 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்டில் உள்ளஆதிரெத்தின கணபதி, பாரதிநகர் லட்சுமிவிநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் பக்திபாடல்களை பாடினர்.