உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு பிரம்ம குமாரிகள், கொடியேற்று விழா

நடுவீரப்பட்டு பிரம்ம குமாரிகள், கொடியேற்று விழா

நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு பிரம்ம குமாரிகள், கீதா பாடசாலையில் கொடியேற்று விழா நடந்தது.நடுவீரப்பட்டு பிரம்ம குமாரிகள் கிளையின் சார்பில் கீதா பாடசாலையில், 83வது சிவஜெயந்தி விழாவை முன்னிட்டு, கொடியேற்று விழா நடந்தது.

பாதிரிகுப்பம் ராமலிங்கம் வரவேற்றார். கடலூர் நிமித்த சகோதரி ஜானகி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் திண்டிவனம் ஜாகீர், முத்துகிருஷ்ணாபுரம் வீரப்பன், நடுவீரப்பட்டு வைத்திலிங்கம், ராமலிங்கம், ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !