சிதம்பரம் நடராஜர் கோவிலில் இசை சொற்பொழிவு
ADDED :2396 days ago
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஷண் மதத்தில் சைவம் என்ற தலைப்பில்,இசை நாட்டிய சொற்பொழிவு நடந்தது.மத்திய அரசின் கலை பண்பாட்டுத்துறை ஆதரவுடன், லலிதா சந்தானம் குழுவினரின் ஷண் மதத்தில் சைவம் என்ற தலைப்பில், இசை நாட்டிய சொற்பொழிவு நேற்று 24 ல், மாலை நடந்தது.வெங்கடேச தீட்சதர் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அகணி நடராஜ சட்டையப்பன் வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறை முதன்மையர் முத்துராமன், பேராசிரியர் ரெங்காச்சாரியார் பங்கேற்றனர்.