உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரியில் குடிநீர் அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரியில் குடிநீர் அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர்:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குடிநீர் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பாக மதுரை உயர்நிதிமன்றம் உத்தரவின்படி அரசுத்துறை அதிகாரி கள் ஆய்வு நடத்தினர்.

இக்கோயிலுக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வரும் பக்தர்களுக்கு குடிநீர், போலீஸ் பாதுகாப்பு, மருத்துவம், போக்குவரத்து, தங்குமிடம், தீயணைப்பு வசதிகள் செய்து தரக்கோரி, திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

வனத்துறை, இந்துசமய அறநிலையத்துறை, குடிநீர் வழங்கல் துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து , மார்ச் 27 ல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு கடந்த மார்ச் 19 அன்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நேற்று (மார்ச்., 25ல்) காலை 7:00 மணிக்கு தாணிப்பாறை மலையடிவாரத்திற்கு திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன், மாவட்ட வனகாப்பாளர் நிகராஞ்சன், ஸ்ரீவில்லிபுத்தூர் வன அலுவலர் முகமதுஷாபாப், அறநிலையத்துறை அதிகாரி பச்சையப்பன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் சதுரகிரி மலை மற்றும் கோயிலில் ஆய்வு நடத்தினர். இதுகுறித்த ஆய்வறிக்கையை நாளை (மார்ச் 7) அதிகாரிகள் தாக்கல் செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !