கரூர் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுமா?
ADDED :2403 days ago
கரூர்: குளித்தலை அடுத்த, தோகைமலை சுற்றியுள்ள பகுதிகளில், மாசி மாதம் முதல், அனைத்து கோவில்களிலும் திருவிழா தொடங்கும். அப்போது, கரகாட்டம், நாடகம், தேவராட்டம், ஒயிலாட்டம் உள்பட, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் விடிய விடிய நடக்கும். தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இரவு, 10:00 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவின் போது, கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் எஸ்.பி., ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.