ஆர்.எஸ்.மங்கலம் அகஸ்தீஸ்வர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2404 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே அறு நூற்றுமங்கலம் அகஸ்தீஸ்வர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை மற்றும் விநாயகர் வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்பு யாக சாலையில் பூஜை செய்யப்பட்டு புனித நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின் அன்னதானம் நடந்தது. அறுநூற்று மங்கலம், வெளியக்கோட்டை உட்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.