கடலாடி வருடாபிஷேக விழா
ADDED :2491 days ago
கடலாடி:கடலாடி அருகே எஸ்.கிடாக்குளத்தில் கள்ளழகர், ஆஞ்சநேயர், ராமலிங்கர், சேது கோடாங்கி கோயிலில்11ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெண்கள் பொங்கலிட்டனர்.கோயில் முன் 20க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாக்கள்பலியிடப்பட்டு, கறிச்சோறு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இரவில் கிராமிய தெம்மாங்கு கலை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு மாட்டு வண்டி பந்தயமும்,இரவில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் நாடகமும் நடக்க உள்ளது.ஏற்பாடுகளை எஸ்.கிடாக்குளம் கிராம பொதுமக்கள்,விழாக்குழுவினர் செய்திருந்தனர்.