உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சூரிய ஒளி படும் நிகழ்வு

பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சூரிய ஒளி படும் நிகழ்வு

புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சுவாமி சிலையில் சூரியஒளி படும் அதிசய நிகழ்வு நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி கோவிலில் பிரசித்திபெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம், சூரியன் கோவிலின் நேர்க்கோட்டில் உதிக்கும். இதனால் கோவிலில் உள்ள சுவாமி சிலையில் நேரடியாக சூரியஒளி படும் அதிசய நிகழ்வு நடக்கும். இந்நிலையில் இந்தாண்டு பங்குனி மாதம் 13 ம் தேதியான நேற்று, சுவாமி சிலையில் சூரியஒளி படும் அதிசய நிகழ்வு நடந்தது. காலை 6.20 மணிக்கு துவங்கிய சூரியஒளி 7.10 மணிவரை சுவாமிசிலை மீது விழுந்தது. அதனையொட்டி பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !