ஊத்துக்கோட்டை அஷ்டமியில் கால பைரவருக்கு பூஜை
ADDED :2755 days ago
ஊத்துக்கோட்டை: மஹா கால பைரவர் சுவாமிக்கு, அஷ்டமி நாளான நேற்று (மார்ச்., 28ல்) நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள, மஹா கால பைரவர் கோவிலில் நடைபெறும் விழாக்களில், தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பு வாய்ந்தது. இவ்விழா, நேற்று, (மார்ச்., 28ல்) காலை, 10:00 மணிக்கு, கோவிலில் நடைபெற்றது.
விழாவை ஒட்டி மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தன. பின், சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மலர் மாலைகளால் அலங்கரித்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.