திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
ADDED :2389 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, 12 நாட்களுக்கு நடைபெறும். காலை, இரவு, இரு வேளையிலும், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர், பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். விழாவை முன்னிட்டு, இன்று (மார்ச்., 30ல்), காலை, 5:30 மணிக்கு, துவஜா ரோகனம் கொடியேற்றம் நடைபெற்றது, காலை, 7:30 மணிக்கு, சப்பரத்தில் தீர்த்தீஸ்வரர் தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு, 7;30 மணிக்கு சிம்ம வாகனம் உலா நடைபெறும்.