உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் வனகாளியம்மன் கோயில் விழா

கூடலுார் வனகாளியம்மன் கோயில் விழா

கூடலுார்: குமுளி மலைப்பாதையில் உள்ள அப்பர்கேம்ப் வனகாளியம்மன் கோயில் விழா ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது.

தமிழக –கேரள எல்லையான குமுளி அப்பர்கேம்பில் பிரசித்திபெற்ற வன காளியம்மன் கோயிலில் ஒரு வாரம் நடக்கும் விழா மார்ச் 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கணபதி ேஹாமம், அம்மன்பூஜை, கருப்பசாமி சிறப்பு பூஜை, படையல் வைத்தல் நிகழ்ச்சி , தீபாராதனை நடந்தது. தமிழக , கேரள பக்தர்கள் ஏராளமானோர்  பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.  அன்னதானம் வழங்கப்பட்டது. விழா நாளையுடன் முடிகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !